குவைத் அரசாங்கத்திடமிருந்து ரூ. 300 மில். பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்

குவைத் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 300 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

மேற்படி மருத்துவ உபகரணங்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கையளித்துள்ளது. அரசாங்கமானது குவைத் அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மேற்படி

அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றின் பெறுமதி 300 மில்லியன் ரூபாவாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைத் நாட்டின் ரெட் கிரசென்ட் அமைப்பு மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் அதற்கான இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததுடன் குவைத் மக்கள் இலங்கை மக்களுக்கு வழங்கும் நன்கொடையாக அந்த மருத்துவ உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

இலகுவாக எடுத்து செல்ல கூடிய ஒட்சிசன் செறிவூட்டிகள், மருத்துவமனை கட்டில்கள், வென்டிலேட்டர்கள் உள்ளடங்கலாக 167,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இத்தொகுதி மருத்துவ ௨பகரணங்கள், மருத்துவர் சுமன் ரத்நாயக்க ஔடதங்கள் உறபத்தி மற்றும் வழங்கல் ஒழுங்குமுறை இராஐங்க அமைச்சின் செயலாளரிடம் இலங்கை செஞ்சிலுவை சங்கதின் பிரதி பணிப்பாளர் நாயகம் அருண லேகமே இனால் குவைத் செம்பிறை சங்கம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் சார்பாக பணடாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று  (16) காலை கையளிக்கபட்டது.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)
 

Thu, 06/17/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை