வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள 24 பேரை கைதுசெய்வதற்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 24 பேரை கைது செய்ய சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 24 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதையடுத்தே அவர்களைக் கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸ் ஊடாக இந்த சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 13 பேர் இதில் இடம்பெற்றிருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவர்களுள் இரண்டு பேர் தற்போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tue, 06/22/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை