மியன்மார் மோதல்; புலம் பெயர்ந்த சுமார் 230,000 பேருக்கு உதவி தேவை

ஐக்கிய நாட்டு நிறுவனம்

மியன்மார் சண்டை காரணமாகப் புலம் பெயர்ந்த சுமார் 230,000-க்கும் பேருக்கு உதவி தேவைப்படுவதாய் ஐக்கிய நாட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில், மியன்மார் அரசாங்கத்திடமிருந்து இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து, ஆர்பாட்டக்காரர்களையும், புதிய ஆயுதக் குழுக்களையும் ஒடுக்கும் இராணுவ நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அந்த மோதல்களில் சுமார் 900 பேர் மாண்டனர். 6,000-க்கும் கூடுதலானோர் கைதுசெய்யப்பட்டனர்.

இருதரப்பு மோதல்களால், நிவாரண உதவிகள் தடைபடுவதாய் ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்தது.

அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட அரசதந்திர முயற்சிகளும் தடைபட்டுள்ளன.

நாட்டில் நிலைத்தன்மை திரும்பிய பிறகே, ஆசியான் தலைவர்கள் வெளியிட்ட கருத்திணக்கக் குறிப்பில் உள்ள 5 அம்சங்களை நடைமுறைப்படுத்த முடியும் என மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது.

Sat, 06/26/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை