சீரற்ற காலநிலையால் இதுவரை 21 பேர் பலி

ஐவருக்கு காயம்; 1,76,439 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் மேலும் ஐவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்தது.

அது தொடர்பில் நேற்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தற்போதும் நாட்டின் 10 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த சூழ்நிலைகளில் ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 419 பேர் தொடர்ந்தும் பல்வேறு பாதிப்புகளை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 2,689 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பான இடைத்தங்கல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை இன்றைய தினமும் தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Thu, 06/10/2021 - 08:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை