பாகிஸ்தானில் 2020 ஆம் ஆண்டு ஏழ்மை நிலை 5%க்கு மேல் அதிகரிப்பு

உலக வங்கி தகவல்

பாகிஸ்தானில் கடந்த 2020ம் ஆண்டு ஏழ்மை நிலை 5 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள ஏழ்மை நிலை விகிதம் பற்றி தி நியூஸ் இன்டர்நேசனல் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2020ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் ஏழ்மை நிலை 5 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டில் 20 இலட்சம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். குறைவான நடுத்தர வருவாய் ஏழ்மை விகிதம் அடிப்படையில், அந்நாட்டில் 2020--21ம் நிதியாண்டில் ஏழ்மை விகிதம் 39.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

இது, வரும் 2021--22ம் ஆண்டில் 39.2 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும். வருகிற 2022--23ம் ஆண்டில் இது 37.9 சதவீதம் அளவுக்கு குறையும் என தெரிவித்துள்ளது.

இதேபோன்று, அதிக நடுத்தர வருவாய் ஏழ்மை விகிதம் அடிப்படையில், அந்நாட்டில் 2020--21ம் நிதியாண்டில் ஏழ்மை விகிதம் 78.4 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

இது, வரும் 2021--22ம் ஆண்டில் 78.3 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும். வருகிற 2022--23ம் ஆண்டில் இது 77.5 சதவீதம் அளவுக்கு குறையும் என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் 40 சதவீத வீடுகள் மிதஅளவில் இருந்து கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டு உள்ளன என்றும் வங்கி மதிப்பீடு தெரிவிக்கிறது.

ஏழ்மை விகிதம் அதிகரித்து வருகிறது என உலக வங்கி சுட்டி காட்டி வருகிற சூழலில், 2018--19ம் ஆண்டிற்கான ஏழ்மை விகிதங்களை அரசு வெளியிட்டு உள்ளது.

அது கடந்த 2015--16ம் ஆண்டில் 24.3 சதவீதம் என்ற அளவில் இருந்து 21.9 சதவீதம் என்ற அளவுக்கு சரிந்து உள்ளது என கொரோனா காலத்திற்கு முன்னான விவரங்களை தெரிவித்துள்ளது.

Thu, 06/24/2021 - 14:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை