2009இல் 03 இலட்சம் மக்களை விடுவித்தவர்கள் ராஜபக்‌ஷவினர்!

சரணடைந்த 13,000 புலிகளுக்கும் புனர்வாழ்வளித்தவர்கள்

 

நன்றி மறப்பது நல்லதல்ல  என புலம்பெயர் சமூகம் சார்பில்  அனஸ்லி ரட்ணசிங்கம் தெரிவிப்பு

 தமிழ் அரசியல் கைதிகள் 16 பேருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தமையை வரவேற்றுள்ள புலம்பெயர் சமூகம் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களையும் இதேபோன்றே அவர் விடுவித்தார், அதனை தமிழ் மக்கள் நன்றியுடன் நினைவுகூர வேண்டும் என பொதுஜன முன்னணியின் ஆதரவாளர் அனஸ்லி ரட்ணசிங்கம் ஜெர்மனியில் இருந்து தெரிவித்தார் .

அதேபோன்று 2009 இல் இறுதி யுத்தத்தில் அரசாங்கத்திடம் சரணடைந்த சுமார் 13,000 விடுதலைப்புலிகளையும் அப்போதய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டுதலில் அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த இன்றைய ஜனாதிபதி விடுவித்தார் என்பதையும் தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது எனவும் அனஸ்லி ரட்ணசிங்கம் தெரிவித்தார் .

எனவே, தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்வோரும் பொறுமையாக இருந்து இந்த அரசாங்கத்திற்கு ஆதரவினை தெரிவித்து மீதமாக சிறைகளில் வாடுகின்ற ஏனைய தமிழ் அரசியல் சிறைக்கைதிகளின் விடுதலைக்காகவும் பாடுபடவேண்டும்.

சற்று பொறுமையுடன் இருந்தால் அனைத்து அரசியல் கைதிகளும் இந்த அரசாங்கத்தில் முற்றாக விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் விமோசனத்தை பெற்றுத்தரும் வகையில் செயற்படுகின்ற இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைத்து எவரும் குழப்பி விடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஐந்து வருடங்களாக நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் வெறுமனே முண்டு கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் அரசியல் தலைமைகள் இனியும் அத்தகைய தவறை செய்யக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Tue, 06/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை