200 ஆண்டுகால பழைமையான கட்டடம்

கொழும்பு, கொம்பனித் தெரு பகுதியிலமைந்துள்ள பழைமைவாய்ந்த கட்டடமொன்று நேற்று முன்தினமிரவு இடிந்து வீழ்ந்துள்ளது.

கொழும்பு, கொம்பனித் தெரு சந்தியில் அமைந்துள்ள டி சொய்சா என்ற இந்தக் கட்டடம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததென்றும், இடிந்து வீழ்வதற்கு முன்னர் சில காலம் கைவிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டடத்தை இடிக்க உரிமையாளர் முன்பு அனுமதி கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி தொல்பொருள் திணைக்களத்தினால் மறுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே நேற்று முன்தினமிரவு கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் உயிரிழப்புகளோ அல்லது எவருக்கேனும் எதுவித காயங்களோ ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் உறுதிபடுத்தினர்.

 

Fri, 06/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை