கண்டியில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றுவதில் மக்கள் ஆர்வம்

கண்டியில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றுவதில் மக்கள் ஆர்வம்-COVID19 Vaccination in Kandy

கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வுகள் பல இடங்களுல் நடைபெற்றன. அரச ஊழியர்களுக்கும் கள உத்தியோகத்தர்களுக்கும் கண்டி புஷ்பதான மகளிர் கல்லூரியிலும், கண்டி மகானாம கல்லூரி, டி.எஸ் சேனாநாயக்கா வித்தியாலயம், பெண்கள் உயர் கல்லூரி என்பவற்றிலும், பாத்தும்பறை தொகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மடவளை மதீனா மத்திய கல்லூரியிலும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

மக்கள் மும்முரமாக தடுப்பூசி ஏற்றுவதில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும்     மடவளை மதினா தேசிய கல்லூரியில்  தடுப்பூசி ஏற்றும்  நடவடிக்கைகளை நேரில் பார்வையிடுவதற்காக  நேற்றுமுன்தினம் (19) இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்கு சமூகமளித்திருந்தமை  குறிப்பிடத்தக்கதாகும். 

பட விளக்கம்: பாத்ததும்பறை பிரதேச உறுப்பினர்கள்  அமைச்சகரை அழைத்து  செல்வத்தையும்60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி  ஏற்றுவதில் ஆர்வமாக உள்ளதொயும் படங்களில் காணலாம்.

(எம்.ஏ. அமீனுல்லா, பாத்ததும்பறை விசேட நிருபர்)

Mon, 06/21/2021 - 18:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை