கொவிட்-19 வைரஸ் தொற்று ஒழிப்பு இலங்கைக்கு ரஷ்யா வழங்கிவரும் ஆதரவுக்கு அமைச்சர் தினேஸ் பாராட்டு

இலங்கைக்கு ரஷ்யா நல்கிய ஆதரவுகளுக்காக, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் லாவ்ரோவுடனான தொலைபேசி உரையாடலின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 07ஆம் திகதி, திங்கட்கிழமை நடைபெற்ற ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வுடனான தொலைபேசி உரையாடலின் போது, கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு ரஷ்யா நல்கிய ஆதரவுகளுக்காகவே வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இது தொடர்பான, இலங்கையின் நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்துக்கு ஆதரவுகளை வழங்கும் முகமாக, ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக ரஷ்யாவின் உதவி மற்றும் தடுப்பூசியைத் தயாரிப்பதில் சம்பந்தப்பட்ட தொற்றுநோயியல் மற்றும் உயிரியியல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கிடையிலான தற்போதைய ஒத்துழைப்பு ஆகியவற்றை வெளிநாட்டமைச்சர் தினேஸ் குணவர்தன வரவேற்றார்.

மனித உரிமைகள் பேரவை உட்பட பல்தரப்பு அரங்குகளில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவுகளுக்காக, ரஷ்யாவுக்கு இலங்கையின் பாராட்டுக்களை வெளிநாட்டமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

இரு வெளிநாட்டமைச்சுக்களினதும் கட்டமைப்புக்குள் திட்டமிடப்பட்டுள்ள இருதரப்பு ஆலோசனைகள் மற்றும் அரசாங்கங்களுக்கிடையிலான வர்த்தக, பொருளாதார, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஆணைக்குழு ஆகியன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

Thu, 06/10/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை