ஆசிரிய சேவைக்கு 18,000 பட்டதாரிகள்

கல்வியமைச்சுக்கு அனுமதி

பட்டதாரி பயிற்சியாளர்கள் 18,000 பேரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கிணங்க நாடளாவிய ரீதியில் கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு அவர்களை இணைத்துக்கொள்ள கல்வியமைச்சுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கிணங்க கல்வியமைச்சு விடுத்துள்ள ஆலோசனை அங்கீகரிக்கப்பட்டு அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படி 18,000 பட்டதாரி பயிற்சியாளர்களையும் கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 06/25/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை