கற்பனையிலுள்ள சிற்பம் 18,000 டொலருக்கு ஏலம்

இத்தாலியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் கண்களுக்கு தெரியாத சிற்பத்தை 18,000 டொலருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த சிற்பம் அந்த கலைஞனின் கற்பனையில் மாத்திரமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சல்வடோர் கராவ் என்ற அந்த சிற்ப கலைஞர், நான் என்ற தலைப்பில் ஒரு சிற்பத்தை உருவாக்கியுள்ளார். கண்களுக்கே புலப்படாத அந்த சிற்பத்தை வெற்றிடம் என சல்வடோர் அழைக்கிறார்.

இதனை சிற்பமாக ஏற்றுகொண்ட ஒருவர் ஏர்நெட் என்ற ஏல மையத்திலிருந்து 18,000 டொலர் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். இது எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிக விலை போனது மகிழ்ச்சி அளிப்பதாக சல்வடோர் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிட சிற்பத்தை கண்காட்சியில் வைக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sun, 06/06/2021 - 07:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை