ஒரே பஸ்ஸில் பணிக்கு சென்ற 18 பேருக்கு கொரோனா தொற்று

ஹப்புத்தளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள பிட்டரத்மலை, தொட்டலாகல மற்றும் தம்பேத்தென்ன தேயிலைத் தோட்டங்களைச் சேர்ந்த 18 ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் கொவிட்-19 தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் இக்குழுவினர் ஹப்புத்தளையிலிருந்து பலாங்கொடைக்கு ஒரே பஸ்ஸில் பயணித்துள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி ஆடைத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் குறித்த பஸ்ஸில் பயணித்த ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவர் தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அங்குள்ள 33 பெண் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையிலேயே 18 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு தெரிவிக்கிறது.

இதேவேளை இவர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Fri, 06/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை