தோட்டத் தொழிலாளர்களுக்கு 171 வீடுகள் அமைக்க அரசு முடிவு

தெரணியகல, மாலிபொட பகுதியில் திட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ தலைமையில் தெரணியகல பிரதேசத்தில் நடைபெற்ற 'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய மாலிம்பொடவை சூழவுள்ள பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்காக 171 வீடுகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 171 வீடுகள் அடங்கலாக தோட்டத் தொழிலாளர்களுக்காக 480 வீடுகளை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாவை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இந்தியாவின் நன்கொடையின் கீழ் மாலிம்பொடவில் 171 வீடுகளை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கும், அதன் முதற்கட்டமாக 60 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்துக்கு வழங்குவதற்கும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Wed, 06/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை