நைஜீரியாவில் மேலும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்

நைஜீரிய இஸ்லாமிய பாடசாலை ஒன்றில் இருந்து மாணவர்கள் பலரும் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பாடசாலைகள் மீதான தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டெகினா நகரில் இருக்கும் பாடசாலையில் உள்ள மாணவர்களே கடந்த ஞாயிற்றுக்கிழமை அவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். 150 மாணவர்கள் வரை காணாமல்போயிருப்பதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டபோதும் அந்த எண்ணிக்கை 200க்கும் அதிகம் என்று ஏனைய தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

நைஜீரியாவின் வடக்கு மாநிலங்களில் பிணைத் தொகை கேட்டு மாணவர்களை கடத்திச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த பெப்ரவரியில் சுமார் 300 சிறுமிகள் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் நகரில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், மாணவர்களை கடத்திச் சென்றதாக சம்பவத்தை பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடசாலையில் ஆறு தொடக்கம் 18 வயதான மாணவ, மாணவியர்கள் கற்கின்றனர்.

இதன்போது இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Tue, 06/01/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை