12 சதவீதமானோருக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது

உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு

உலக மக்கள் தொகையில் இதுவரை வெறும் 12 சதவீத மக்கள் தொகைக்கே கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளில் ஜூன் 10ம் திகதி நிலவரப்படி கொவிட் தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களின் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில், ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் இதுவரை 12 சதவீதம் பேருக்கு மட்டுமே கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 93.20 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

அதிகபட்சமாக இஸ்ரேலில் 63.1 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து கனடாவில் 62.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் 62.7 சதவீதமாகவும் அமெரிக்காவில் இது 51.4 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் 13.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொவிட் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், ஒரு நாளில் தடுப்பூசி போடும் எண்ணிக்கையை விட, மிக அதிக வேகத்தில் தொற்று பரவி வருகிறது. ஏழை நாடுகளில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே கொவிட் பெருந்தொற்றில் இருந்து மீள முடியும் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

 

 

Wed, 06/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை