யாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ஆறு இணை நகரத் திட்டம்; ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு

அங்கஜன் தெரிவிப்பு

நாட்டில் 100 நகரங்களை பல் பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 6 பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக் கருவுக்கு அமைய பெரு நகர அபிவிருத்தி அமைச்சு குறித்த செயற்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வேலணை, சாவகச்சேரி, கொடிகாமம் நாவற்குழி, நெல்லியடி, மருதனார்மடம் போன்ற பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

நாட்டில் நூறு நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு பிரதேசத்தை பல் பரிமாண நகராக்குவதற்கு சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

கொழும்பு, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய 4 முக்கிய வணிக நகரங்களை இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களைக் கொண்டிருப்பதால், அவை தேசிய மற்றும் சர்வதேச வணிக வலையமைப்பின் மையங்களாக இணைக்கப்படும்.

இவற்றை மையப்படுத்தி நாட்டில் உருவாக்கப்பட உள்ள 100 நகரங்கள் வணிக நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கான கலந்துரையாடல் பெரு நகர அபிவிருத்தி அமைச்சில் இடம் பெற்றுள்ளதுடன் அதற்கான வேலைத் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கோப்பாய் குறூப் நிருபர்

Mon, 06/21/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை