மகனை 12 வருடங்களாக தேடி அலைந்த தாய் மரணம்

புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழப்பு

பன்னிரண்டு வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த தாய், அவரை காணாமலேயே உயிரிழந்துள்ளார்.

கடந்த 2009 இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் காணாமல் ஆக்கப்பட்ட அவரது மகனான செஞ்சுடர் மாஸ்டர் என்பவரையே இதுவரை காலமும் தேடி வந்த நிலையில் புற்றுநோயினால் நேற்று உயிரிழந்துள்ளார்.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும் சேகுவேராவின் தாயாரும் ஆகிய தேவகிஅம்மா என்பவரே உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் விடயத்தில் உரிய நீதி கிடைக்காத நிலையில் உயிரிழந்துள்ள தாயாருக்கு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா சங்கத்தினர், தமது இரங்கல், அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.

 

 

Tue, 06/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை