மனிதனுக்கு முதல்முறையாக ‘எச்10என்3’ வைரஸ் தொற்று

‘எச்10என்3’ எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று சீனாவில் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் தொற்றுனால் மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

எனினும், இதனால் கொரோனா போன்ற பெருந்தொற்று பரவுவதற்கான அபாயம் மிகவும் குறைவு என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜென்ஜியாங் நகரில் உள்ள 41 வயதாகும் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்றியுள்ளது அந்த நபரின் உடல்நிலை தற்போது ஸ்திரமாக உள்ளதாகவும், விரைவில் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படலாம் எனவும் அரசுக்குச் சொந்தமான சி.ஜி.டி.என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அந்த நபருக்கு ‘எச்10என்3’ தொற்று ஏற்பட்டிருந்தது கடந்த மாதம் 28ஆம் திகதி கண்டறியப்பட்டதாக தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்திருந்தது. எனினும், அந்த நோய்த்தொற்று அவருக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அந்த ஆணைக்குழு விளக்கமாகத் தெரிவிக்கவில்லை.

எனினும், இந்த விவகாரம் குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பண்ணைகளில் பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும் மிகவும் அபூர்வமான சம்பவங்களில் ஒன்று இது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Thu, 06/03/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை