அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து: 100க்கும் மேற்பட்டோர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோர விபத்தில் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் துரிதப்பட்டுள்ளன. 12 மாடி குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இந்த கட்டடம் 40 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக, இந்த கட்டடம் கொங்கிரீட் மறுசீரமைப்பு மற்றும் வழக்கமான பழுது போன்ற பிற பராமரிப்புகளுக்கு உட்பட்டுள்ளது என்றும் இதுபோன்ற அசாம்பாவிதம் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்று காண்டோ சங்கத்தின் வழக்கறிஞர் கென்னத் டைரெக்டர் கூறினார்.

புளோரிடா கட்டடங்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டமைப்பு பாதுகாப்பிற்காக மறுசீரமைக்கப்பட வேண்டும், மேலும் கட்டடம் அந்த செயல்முறையைத் தொடங்கியுள்ளது என்று சிவில் பொறியியலாளர் மாகாணத்தின் ஆலோசகர் திட்டக்காரருமான வால்டர் கெல்லர் கூறினார்.

கடல்நீரின் அரிக்கும் விளைவுகளைத் தாங்க கட்டிடங்கள் அவற்றின் கொங்கிரீட் முகப்பை அடிக்கடி வலுப்படுத்த வேண்டும் என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

கட்டட சுவர்களில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய வீட்டு உரிமையாளர்கள் சங்கம் தவறிவிட்டதாக வளாகத்தில் வசிக்கும் ஒருவர் புகார் அளித்ததாக நீதிமன்ற பதிவுகள் காட்டுகின்றன. கட்டடத்தின் கூரையில் பணிகள் நடைபெற்று வருகின்றன, கட்டட ஆய்வாளர்கள் சமீபத்தில் கோபுரத்தை பார்வையிட்டதாக சர்ப்சைட் ஆணையாளர் எலியானா சல்ஹவுர் கூறினார்.

Sat, 06/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை