இரண்டாம் டோஸ் செலுத்த கொழும்பிற்கு 10,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள்

கொழும்பிலுள்ளவர்களுக்கு இரண்டாம் டோஸ் செலுத்துவதற்காக 10,000 அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கொழும்பு மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி அவற்றை 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதனை செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகர சபைக்குட்பட்ட பகுதியில் இதுவரையில் 02 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் டோஸ் செலுத்துபவர்களுக்கு குறுந்தகவல் தெரிவிக்கப்படவுள்ளதாகவும் அவ்வாறு குறுந்தகவல் அனுப்ப முடியாதவர்களின் வீடுகளுக்கு சென்று அறிவிக்கப்படுமென வும் அவர் தெரிவித்துள்ளார்.

Mon, 06/28/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை