ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் 06ல் வருகிறது

இலங்கையினால் சீனாவிடம் கோரப்பட்ட 2 மில்லியன் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசிகளில் ஒரு மில்லியன் டோஸ்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சைனோபார்ம் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் சீன நிறுவனம் இதனை உறுதி செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எஞ்சிய ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் எதிர்வரும் 09 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Thu, 06/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை