SLS தர நிர்ணய நிறுவன தலைவர் நுஷாட் பெரேரா இராஜினாமா

SLS தர நிர்ணய நிறுவன தலைவர் நுஷாட் SLS தர நிர்ணய நிறுவன தலைவர் நுஷாட் இராஜினாமா-Nushad Perera Has Resigned as the Chairman of the Sri Lanka Standards Institution-SLSI

இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) தலைவர் பதவியிலிருந்து நுஷாட் பெரேரா இராஜினாமா செய்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நுஷாட் பெரேரோ,

தான் பதவியிலிருந்து விலக எடுத்த முடிவு, திடீரென எடுக்கப்ட்ட முடிவு அல்ல எனவும், தான் தனியார் துறைக்கு மீண்டும் செல்லவுள்ளதனாலேயே குறித்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 30 திகதியிடப்பட்ட அவரது இராஜினாமா கடிதம், கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி ஜனாதிபதி செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் (2020) டிசம்பர் மாதமளவில் நுஷாட் பெரேரா இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரது காலப் பகுதியிலேயே, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில், புற்றுநோய்க்கு வழி வகுக்கும் காரணிகள் உள்ளடங்கிய விடயம், தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னர் லங்கா சதொச நிறுவனம் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபன (CWE) தலைவராக இருந்த அவர் சீனி இறக்குமதி தொடர்பான சர்ச்சையை அடுத்து, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sun, 05/02/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை