தனியார் வைத்தியசாலைகளில் PCR, அன்ரிஜென் சோதனை; 4 வழிகாட்டல்

தனியார் வைத்தியசாலைகளில் PCR, அன்ரிஜென் சோதனை; 4 வழிகாட்டல்-Series of Guidelines to be Adhered by Private Hospitals When Conducting PCR and Rapid Antigen Tests

- மீறும் வைத்தியசாலையின் அனுமதி நீக்கப்படும்

PCR, Rapid Antigen சோதனைகளை மேற்கொள்ளும் தனியார் வைத்தியசாலைகளுக்கு, சுகாதார அமைச்சினால் ஒரு சில வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றாளர்களை இனங்காண்பதற்காக மேற்கொள்ளப்படும் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பில், உரிய தனியார் வைத்தியசாலைகளின் ஆய்வுகூட பிரதானிகளுக்கு 4 முக்கிய விடயங்கள் அடங்கிய வழிகாட்டல்களை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அசேல குணவர்தன வௌியிட்டுள்ளார்.

அதற்கமைய:
1. சிகிச்சையை உறுதிப்படுத்துவதற்கு பொறுப்பான விசேட வைத்திய நிபுணரின் அல்லது வைத்தியரின் அல்லது அதற்கான அவசியம் பரிந்துரை செய்யப்பட்டால் மாத்திரமே குறித்த சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
2. சோதனைக்கான மாதிரியை பெற்றதன் பின்னர், அதற்கான முடிவுகள் கிடைக்கப் பெறும் வரை, நோயாளியை நிறுவனத்தில் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
3. நோயாளிக்கு கொவிட்-19 தொற்று காணப்படுமாயின், சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவிற்கு, உரிய பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு மற்றும் நோயாளிக்கு அறியப்படுத்துவது வைத்தியசாலையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் கடமையாகும்.
4. தொற்றைக் கொண்ட நோயாளர், பொறுப்பு வாய்ந்த வைத்தியரின் ஆலோசனைக்கமைய, அதிகாரம் கொண்ட கொவிட்-19 சிகிச்சை மத்திய நிலையத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை, வைத்தியசாலையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி எடுக்க வேண்டும்.

ஏதேனுமொரு தனியார் வைத்தியசாலை, இவ்விதிமுறைகளை மீறுமாயின், கொவிட்-19 தொடர்பான PCR, Rapid Antigen சோதனைகளை மேற்கொள்வது தொடர்பில், குறித்த வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அனுமதி நீக்கப்படுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Sat, 05/22/2021 - 21:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை