பரீட்சை திணைக்கள சேவைகளை பெற புதிய Mobile app அறிமுகம்

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயப்படுத்தல் கொள்கைக்கிணங்க கையடக்கத் தொலை பேசி ஊடான புதிய மொபைல் எப் Mobile app ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. .எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.அதன்மூலம் பரீட்சை திணைக்களம் தொடர்பான அனைத்து சேவைகளையும் வீட்டிலிருந்தே கையடக்க தொலைபேசி ஊடாக மேற்கொள்வதற்கு அனைவருக்கும் வசதியாக இந்த புதிய வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றபோது அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ்,...

ஒன்லைன் மூலம் சான்றிதழ் பத்திரங்களுக்காக விண்ணப்பித்தல், பரீட்சை பெறுபேறுகளை உறுதிப்படுத்திக் கொள்ளல், பரீட்சை இலக்கங்களை பெற்றுக்கொள்ளல், நிறுவன ரீதியான பரீட்சை பெறுபேறுகளை கண்காணித்தல், பரீட்சைகள் தொடர்பான நேர அட்டவணையை கண்காணித்தல், ஒன்லைன் எக்ஸேமினேஷன் சிஸ்டம், ஒன்லைன் எப்ளிகேஷன் மொடியுல் , பயிற்சிகளுக்காக ஒன்லைன் மூலம் விண்ணப்பித்தல் போன்ற பரீட்சைத் திணைக்களத்திற்கு நேரடியாக சென்று மேற்கொள்ள வேண்டிய அனைத்து சேவைகளையும் இதன் ஊடாக தாம் இருக்கும் இடத்திலிருந்து கையடக்கத் தொலைபேசி மூலமாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். (ஸ

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 05/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை