இஸ்ரேல் இராணுவத்தின் தேடுதலில் பலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட நப்லூஸ் நகரின் தெற்காக உள்ள கிராமம் ஒன்றில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தேடுதலின்போது 16 வயதான பலஸ்தீன சிறுவன் ஒன்றுவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடாலா கிராமத்தின் நுழைவாயிலில் அமைந்திருக்கும் ஒலிவ் தோப்பில் இருந்த இஸ்ரேலிய படையினர் சயித் ஒதேஹ் என்ற அந்த சிறுவன் மீது பின்புறமான இரு தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதாக பலஸ்தீன சிறுவர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு அம்புலன்ஸ் வண்டி அங்கு செல்வதையும் 15 நிமிடங்களுக்கு இஸ்ரேலிய படை தடுத்துள்ளது. பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற மோதலின்போது சுடப்பட்ட இரண்டாவது பலஸ்தீனர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நப்லூசின் தெற்காக பலஸ்தீன கிராமம் பெய்டாவுக்கு அருகில் கடந்த புதனன்று தம்மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய பலஸ்தீனர்களை நோக்கி துருப்புகள் துப்பாக்கிச்சூடு நடத்தி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

 

Fri, 05/07/2021 - 12:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை