உய்குர் விவகாரம்: சீனாவுக்கு பல நாடுகளும் கடும் அழுத்தம்

சீனாவின் உய்குர் இன முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

மனித உரிமை அமைப்புடன் இணைந்து மூன்று நாடுகளும் ஏற்பாடு செய்த இணையக் கருத்தரங்கில் அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சின்ஜியாங் மாநிலத்தில், உய்குர் இன முஸ்லிம்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், வலுக்கட்டாயமாகப் பெண்கள் கருத்தரிக்க முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுவதாகவும் அமெரிக்கத் தூதர் குறிப்பிட்டார்.

உய்குர் இன முஸ்லிம்கள் சிலர், தாங்கள் எதிர்நோக்கும் துன்பங்களை வர்ணிக்கும் காணொளிகள், அந்தக் கருத்தரங்கில் ஒளிபரப்பாயின. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைத் தூதர், சின்ஜியாங் செல்ல சீனா தடையற்ற அனுமதி வழங்க வேண்டுமென பிரிட்டிஷ் தூதர் வலியுறுத்தினார்.  

இந்நிலையில் சின்ஜியாங் பிராந்தியத்தில் இடம்பெறும் நடவடிக்கைகளில் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் குறைந்தது 630 இமாம்கள் மற்றும் ஏனைய முஸ்லிம் தலைவர்களை தடுத்து வைத்திருப்பதாக உய்குர் உரிமைக் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Fri, 05/14/2021 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை