ஆப்கான் மாவட்டம் தலிபான்கள் வசம்

ஆப்கானிஸ்தானில் நோன்புப் பெருநாள் விடுமுறையை ஒட்டி மூன்று நாள் போர் நிறுத்தம் ஆரம்பிப்பதற்கு சில நாள் இருக்கும் நிலையில் தலைநகர் காபுலுக்கு அருகில் உள்ள மாவட்டம் ஒன்றை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

திடீர் தாக்குதல் ஒன்றின் மூலம் வர்தக் மாகாணத்தில் இருந்து நெர்க் மாவட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை தாம் கைப்பற்றியதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாரத்திற்குள் தலிபான்களிடம் வீழும் இரண்டாவது மாவட்டமாக வர்தக் உள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து முழுமையாக வெளியேற தயாராகி வரும் நிலையில் ஆப்கானில் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

இந்த மாவட்டத்தை தலிபான்கள் கைப்பற்றியதை உறுதி செய்திருக்கும் அந்த மாவட்டத்தின் ஆளுநர் அப்துல் ரஹ்மான் தாரிக் ஆப்கான் துருப்புகள் மூலோபாயமாக மாவட்டத்தில் இருந்து பின்வாங்கியதாக தெரிவித்தார்.

அந்த மாவட்டத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக தாக்குதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக தலிபான்கள் கடந்த மே 5 ஆம் திகதி பொர்கா மாவட்டத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Thu, 05/13/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை