அந்தமான் தீவருகே தாழமுக்கம் சூறாவழியாக மாறும் அபாயம்

இலங்கைக்கு நேரடி பாதிப்பில்லை; எனினும் இடியுடன் கூடிய மழை தொடரும்

 

அந்தமான் தீவுக்கருகில் குறைந்த அழுத்தத்துடன் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் அது சூறாவளியாக மாறுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது இந்தியாவின் மேற்கு பிரதேசத்திற்குள் பிரவேசிக்குமென தெரிவித்துள்ள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, இலங்கைக்குள் சூறாவளி பிரவேசிக்கும் வாய்ப்பில்லை என்பதுடன் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாண ஆழ் கடல் பிரதேசங்களில் அதன் பாதிப்பு நேரடியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யுமென்றும் தெரிவித்துள்ள அவர்,

மேற்படி சூறாவளியின் பாதிப்பு வடக்கு மற்றும்  கிழக்கு மாவட்டங்களின் ஆழ்கடல் பிரதேசங்களில் அதன் நேரடியான பாதிப்பு இருக்குமென தெரிவித்துள்ளார் . அதற்கிணங்க நாட்டைச் சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகள் கடற்படையின் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவுகள் இடம்பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடருமென மேற்படி திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளது. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 05/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை