ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை முதற்கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

நாட்டை ஒருபோதும் முடக்க மாட்டோம் - பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவோமே தவிர நாட்டை ஒரு போதும் முடக்கப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவதோடு பொது மக்களின் பொருளாதாரம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

கஹதுடுவ முதல் இங்கிரிய வரையான ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளை நேற்று ஆரம்பித்து வைக்கும் இணைய வழியான  நிகழ்வின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதைத் தெரிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக குறித்த நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது.

 

 

Sat, 05/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை