சீனா குறித்து அமெ. ஐ.ஒன்றியம் கூட்டணி

சீனா போன்ற நாடுகளுடனான வர்த்தக செயற்பாடுகளை கையாள்வதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூட்டணி சேர்ந்துள்ளது. ‘வர்த்தகத்தை சிதைக்கும் கொள்கைகளை கண்காணித்தல்’ என்று இது அழைக்கப்படுகிறது.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கத்ரினா டாய், அமெரிக்க வர்த்தகச் செயலாளர் கினா எம் ரெய்மொன்டோ மற்றும் ஐரோப்பிய ஆணைய நிறைவேற்று துணைத் தலைவர் வால்டிஸ் டம்ரோஸ்கி இது தொடர்பில் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

உலகளவில் இரும்பு மற்றும் அலுமினியத்தின் அதிகப்படியான கொள்ளளவு குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

மேற்குலக நாடுகள் மற்றும் சீனாவுக்கு இடையில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அண்மைய மாதங்களில் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Sat, 05/22/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை