கோப் குழுவுக்கு கலாநிதி ஹர்ஷ டி.சில்வா பரிந்துரை

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி.சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (04) சபையில் அறிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜன் ராமநாயக்கவின்  பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியதன் காரணமாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

Wed, 05/05/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை