இஸ்ரேலுக்கு எதிராக பாகிஸ்தான் பாராளுமன்றில் கண்டன தீர்மானம்

பலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது இந்த தீமானத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் பலரும் உரையாற்றினர்.

இஸ்ரேலுக்கு எதிராக பாகிஸ்தான் ஜிஹாத் பிரகடனம் செய்ய வேண்டும் என்றும் பின்னர் அதன் மீது அணு குண்டு வீச வேண்டும், ஏவுகணை தாக்குதல் நடத்த வேண்டும், போர் விமானங்கள் அல்லது இராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. பலஸ்தீன் மற்றும் காஷ்மீரை விடுவிக்க முடியாவிட்டால் ஏழு இலட்சம் இராணும் இருந்து என்ன நன்மை என்று ஜமாதே இஸ்லாமியின் மௌலானா அப்துல் அக்பர் சித்ராலி பாகிஸ்தான் இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் இஸ்ரேல் மீது அணு குண்டு போடத் தேவையில்லை என்று குறிப்பிட்ட பாராளுமன்ற விவகார இராஜாங்க அமைச்சர் அலி முஹமது கான், அடுத்த 1000 ஆண்டுகளுக்காக யூதர்களைப் போலவே முஸ்லிம்களும் திட்டமிடுவதற்கு அல்லது தயாராக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

 

Tue, 05/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை