தடுப்பூசி பெறுபவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படுமென இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

சுகாதார அமைச்சு மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் நடத்திய சந்திப்பின் போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,  
தடுப்பூசிகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய புதிய டிஜிட்டல் அடையாள அட்டை, ஒவ்வொரு நபருக்கும் அரசாங்கத்தால் வழங்கப்படும். இதில் தடுப்பூசி செலுத்தப்பட்ட திகதி, இடம், நேரம் மற்றும் வகை மற்றும் தொடர்புடைய தகவல்கள் உள்ளடக்கப்படும்.

நவீன தொழில்நுட்பம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் தருணத்தில் முதல் முறையாக நடைமுறைக்கு கொண்டுவரப்படும் செயற்பாடாக மக்களை மையமாகக் கொண்ட இந்த டிஜிட்டல் அட்டை இருக்கும். டிஜிட்டல்மயமாக்கல் என்பது அடுத்த தலைமுறையினர் பொது சேவைகளை திறம்பட பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையாகும்.

தொற்றுநோயால் வரும் சிரமங்களை சமாளிக்க நாட்டின் மக்களின் நலனுக்காக புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த நாட்டில் புதிய தலைமுறையினரின் நம்பிக்கை இதுதான். எனவே, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு நாட்டின் இளைஞர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்புள்ள அமைச்சாக இதைத் தொடங்க உள்ளது.

கொவிட் தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நாட்டை முன்னோக்கி நகர்த்தக்கூடிய வழிமுறைகளையும் ஆராய வேண்டும். தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்தி பொதுமக்களின் வசதிக்காக தடுப்பூசி தகவல்களைக் கொண்ட டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கப்படும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்   

Wed, 05/12/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை