இத்தாலி தீவுக்கு ஆயிரம் தஞ்சம் கோரிகள் வருகை

இத்தாலி தீவானா லம்பெடுசாவுக்கு ஒருசில மணி நேர இடைவெளிக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை 1000க்கும் அதிகமான தஞ்சக்கோரிக்கையாளர்கள் வந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் ஒரு படகில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 400 பேர் இருந்ததாக இத்தாலியின் அன்சா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சீரான காலநிலை நிலவும் சூழலிலேயே இந்த தஞ்சக்கோரிக்கையாளர்கள் வருகை அதிகரித்திருப்பதாக அந்த தீவின் மேயர் டொடோ மார்டிலோ தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவை அடைய முயற்சிப்பவர்களின் பிரதான துறைமுகங்களில் ஒன்றாக லம்பெடுசா உள்ளது. அருகில் இருக்கும் மோல்டாவை ஒட்டி கடற்பகுதியில் மேலும் பல படகுகள் அவதானிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக தொண்டு அமைப்புகள் கூறியுள்ளன.

‘ஒரு மீட்பு முயற்சியின் மூலம் மொத்தம் 231 பேர் மூழ்கும் அபாயத்தில் இருந்து காப்பற்றப்பட்டனர்’ என்று தொண்டு அமைப்ப ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பம் தொடக்கம் லம்பெடுசா தீவுக்கு சுமார் 11,000 தஞ்சக் கோரிக்கையாளர்கள் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலப்பிரிவில் வருகை தந்த 4,105 பேருடன் ஒப்பிடுகையில் கணிசமான அதிகரிப்பாக உள்ளது.

Tue, 05/11/2021 - 10:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை