கொரோனா தொற்றுடைய கர்ப்பிணி தாய்மார்கள்; மகப்பேற்றின்போது சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள்

கொரோனா தொற்றுடைய கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேற்றின்போது சிகிச்சை அளிப்பதற்கு யாழ். போதனா வைத்தியசாலையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.பவானந்தராஜா தெரிவித்தார்.

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பணி பெண்களின் குழந்தை பிரசவத்திற்கு யாழ். போதனா வைத்தியசாலையில் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,..

யாழ். மாவட்டத்தில் சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளாகும் கர்ப்பணி தாய்மார்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்குவதற்காக பிரத்தியேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பணி பெண்களை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதில் நெருக்கடி நிலை காணப்படுகிறது. அதற்காக ஆதார வைத்தியசாலைகளில் இவர்களுக்காக சிகிச்சை அளிப்பதற்காக பிரத்தியேகமான வைத்தியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆகவே ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி பெண்கள் குழந்தை பிரசவிக்கும் காலப்பகுதியில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களின் பிரசவத்தை உரிய முறையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கோப்பாய் குறூப் நிருபர்

Thu, 05/13/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை