தடுப்பூசி வழங்கும் திட்டம்; அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட ​வேண்டும்

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கிணங்க அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அரச அதிகாரிகளுக்கு தடுப்பூசி வழங்குவது தாமதப்படுமானால் எதிர்காலத்தில் அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் சீர்குலைய வாய்ப்புண்டு என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவ் அமைப்பின் தலைவர் எச். ஏ. எல். உதயசிறி, தற்போது பெருமளவான அரச அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அரச அதிகாரிகளுக்கு முதன்மையளித்து தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ்தடுப்பு நடவடிக்கைகளுக்கு சமகாலத்தில் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களுக்கான சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் அரச அதிகாரிகளின் பங்களிப்பு அதிகமானது என தெரிவித்துள்ள அவர், இத்தகைய நிலையில் அவர்கள் மிகுந்த
ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேல் மாகாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அரச நிறுவனங்கள் தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நிலையில், அவற்றை தடையின்றி முன்னெடுத்துச் செல்வது உறுதிசெய்யப்படவேண்டும்.

அதற்கிணங்க அரசாங்க அதிகாரிகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமையளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Tue, 05/18/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை