நோயுற்ற முதியவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவும்

தயங்க வேண்டாம் -என்கிறார் Dr. ஹேமந்த

வீடுகளிலுள்ள நோய்வாய்ப்பட்ட முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் மரணிக்கும் பெரும்பாலான நோயாளர்களுக்கு, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே, அவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகி இருந்தமை கண்டறியப்படுகிறது.

இதன் காரணமாகவே, கொவிட்19 தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நோய் அறிகுறிகளை கவனத்திற்கொள்ளாது இருப்பதன் காரணமாகவே இத்தகைய நிலை ஏற்படுகிறது. இதனால், நோய் காரணமாக பாதிக்கப்படும் முதியோர் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அற்றவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Wed, 05/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை