பிரிட்டிஷ் பிரதமர் ரகசிய திருமணம்

பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜொன்சன் கடந்த சனிக்கிழமை ரகசியத் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவருக்கும் கேரி சைமண்ட்ஸுக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் திருமணம் நடந்ததாக சன் மற்றும் மெயில் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜோன்சனின் டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த அறிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கவில்லை. திருமண விழாவிற்குக் கடைசி நேரத்தில்தான் விருந்தினர்கள் அழைக்கப்பட்டதாக சன் கூறியது.

ஜோன்சனின் அலுவலக மூத்த உறுப்பினர்களுக்குக்கூட அவரது திருமணத் திட்டங்கள் பற்றித் தெரியவில்லை என்று கூறப்பட்டது. கடந்த ஆண்டு தம்பதி தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டதாக அறிவித்தனர். அவர்களுக்கு ஏப்ரல் மாதம் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

பிரிட்டிஷ் பிரதமர் ஒருவராக இதற்கு முன்னர் கடைசியாக பதவியில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்டவர் ரொபர்ட் பாங்க்ஸ் ஜென்கின்சன் ஆவார். அந்த நிகழ்வு 1822 ஆம் ஆண்டே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Mon, 05/31/2021 - 09:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை