சதொச மூலமாக அடுத்த மூன்று மாதம் தொடர முடிவு

பாராளுமன்றில் அமைச்சர் பந்துல அறிவிப்பு

 

ச.தொ.ச நிறுவனத்தினூடாக சலுகை விலையில் வழங்கப்படும் 27 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை தொடர்ந்து எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்கு பேணுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வர்த்தக அமைச்சின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்கும் நோக்கிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஸ்திரத்தன்மையை பேணவும் எமது அரசாங்கம் அமைச்சரவை தீர்வின் ஊடாக கடந்த காலத்தில் நடவடிக்கையெடுத்திருந்தது.

கடந்த காலத்தில் அரசாங்கம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது டென்டர் முறைமையைதான் கடைப்பிடித்திருந்தது. அரச விலை நிர்ணயத்தின் நிறுவனமாக லங்கா ச.தொ.ச நிறுவனம் காணப்படுகிறது. இதனூடாக மக்களுக்கு மிகவும் குறைவான விலையில் பொருட்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வாரமும் டென்டர் முறைக்கு அழைப்பு விடுத்துதான் பொருடகளை கொள்வனவும் செய்தோம். மிகுதி செலாவணி உடன்படிக்கை யொன்றின் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தோம். மூன்று மாதகாலத்துக்கு கட்டுப்பாட்டு விலையை பேணும் நோக்கில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. நேரடி விலைமனுக்கள் கோரலின் ஊடாக நேரடி இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் செய்துக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் பொருட்களின் விலைகளில் கட்டுப்பாடு பேணப்பட்டது.

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 05/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை