மாலி நாட்டுப் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள்

ஒரு அரிதான நிகழ்வாக மாலி நாட்டு பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

25 வயதான ஹலிமா சிசே என்ற அந்தப் பெண் கடந்த செவ்வாய்க்கிழமை மொரோக்கே மருத்துவமனை ஒன்றில் ஐந்து பெண்கள் மற்றும் நான்கு ஆண் குழந்தைகளை பிரசவித்ததாக மாலி சுகாதார அமைச்சர் பன்டா சிபி தெரிவித்துள்ளார். சிசேரியன் முறையில் குழந்தை பிரசவம் இடம்பெற்றுள்ளது.

மாலியில் மேற்கொள்ளப்பட்ட அல்ட்ராசௌன்ட் ஸ்கான் சோதனையில் சிசேவின் கர்ப்பத்தில் ஏழு குழந்தைகள் இருப்பதாகவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொரோக்கோவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் இரு குழந்தைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தாய் மற்றும் குழந்தைகள் நலமாக இருப்பதாக மருத்துவர் சிபி தெரிவித்தார். அவர்கள் அடுத்த சில வாரங்களில் சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மருத்துவர்கள் ஹலிமா சிசேவுக்கு சிறப்பு கவனிப்பு தேவை என்று கூறியதையடுத்தே, அதிகாரிகள் அவரை மொரோக்கோவிற்கு விமானத்தின் மூலம் அனுப்பிவைத்தனர். ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுப்பதில் மருத்துவ சிக்கல்கள் அதிகம் உள்ளது. பெரும்பாலும் சில குழந்தைகள் முழு காலத்தை எட்டியது இல்லை என கூறப்படுகிறது.

Thu, 05/06/2021 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை