கிராம‌ சேவ‌க‌ர் நிய‌மிக்கும்போது அந்த‌ந்த‌ கிராம‌த்தை சேர்ந்தோருக்கு முன்னுரிமை வ‌ழ‌ங்க‌ வேண்டும்

- உல‌மா க‌ட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

கிராம‌ சேவ‌க‌ர்க‌ள் நிய‌மிக்க‌ப்ப‌டும் போது அந்த‌ந்த‌ கிராம‌த்தை சேர்ந்தோருக்கு முன்னுரிமை வ‌ழ‌ங்க‌ வேண்டும். இவ்வாறு உல‌மா க‌ட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு கிராம‌த்தில் அல்ல‌து ஊரில் இருந்து விண்ண‌ப்பித்தோரில் எவ‌ரும் போட்டிப்ப‌ரீட்சையில் சித்திய‌டையாவிட்டால் அவ‌ர்க‌ளுள் யார் அதிக‌ புள்ளிக‌ள் பெற்றுள்ள‌ன‌ர் என்று பார்த்து அந்த அடிப்ப‌டையில் நிய‌மிக்க‌ப்ப‌ட‌ வேண்டும். 
க‌ட‌ந்த‌ கால‌த்தில் ஆசிரிய‌ நிய‌ம‌ன‌ங்க‌ளின் போது ப‌ல‌ரும் போட்டிப்ப‌ரீட்சையில் தோல்வியுற்றிருந்த‌ நிலையில் தோற்ற‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் அதிக‌ புள்ளிகள் பெற்ற‌வ‌ர்க‌ளுக்கும் நிய‌ம‌ன‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌தை அறிவோம்.

ஒரு கிராம‌த்தின் அதிகாரியாக‌ அந்த‌ கிராம‌த்தில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ரையே நிய‌மிக்க‌ வேண்டும். வேறு கிராம‌த்தை சேர்ந்த‌வ‌ரை நிய‌மிப்ப‌தால் ம‌க்களுக்கு ச‌ரியான‌ சேவைக‌ளை வழ‌ங்குவ‌தில் ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளை எதி்ர்கொள்ளவதை காண‌முடிகிற‌து. 
இவ்வாறு வேறு கிராம‌த்தைச் சேர்ந்தோர் நிய‌மிக்க‌ப்ப‌டும் போது அக்கிராம‌ ம‌க்க‌ளின் குடும்ப‌ ப‌ர‌ம்ப‌ரை தெரியாம‌ல் ப‌ல‌ கிராம‌ உத்தியோக‌த்த‌ர்க‌ள் முழிப்ப‌தையும் க‌ண்டுள்ளோம். 

ஆக‌வே கிராம‌ சேவ‌க‌ர்க‌ள் நிய‌ம‌ன‌த்தின் போது போட்டிப்ப‌ரீட்சைக்கு அப்பால் அந்த‌ந்த‌ கிராம‌ சேவ‌க‌ர் பிரிவில் வாழ்வோருக்கு முன்னுரிமை வ‌ழ‌ங்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து என முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

Mon, 05/31/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை