சீன நிறுவனங்களுக்கு ஐரோப்பாவில் நெருக்கடி

ஐரோப்பாவில் அரசாங்க மனியம் பெறும் வெளிநாட்டு நிறுவனங்களை கையாள்வதை இலக்காகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களை இலக்கு வைக்கும் அதே நேரம் சீனாவின் பெரிய நிறுவனங்களையும் இலக்கு வைத்துள்ளது.

இந்த சட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும் வர்த்தகக் கூட்டாளியான சீனா மீதான நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதன் புதிய சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் புதிய விதிகள் சீனாவை மாத்திரம் இலக்கு வைக்கவில்லை என்றபோதும், சீனாவின் பெரும் நிறுவனங்கள் முதன்மை இலக்காக உள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அரசுகள் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால், அரச மானியங்களில் இருந்து பயனடைவதாக உறுதி செய்யப்படும் வெளிநாட்டு நிறுவனங்களை ஐரோப்பாவில் கையகப்படுத்துவது அல்லது பொது ஒப்பந்தங்களை பெறுவதை தடுக்க அதிகாரம் வழங்கப்படும்.

Sat, 05/08/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை