பைடன் இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவு

இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், 'காசாவில் ஹமாஸ் மற்றும் ஏனைய பயங்கரவாத குழுக்களின் ரொக்கெட் தாக்குதல்களுக்கு எதிராக தம்மை தற்காத்துக்கொள்ளும் இஸ்ரேலின் உரிமை' தொடபில் வலுவான ஆதரவை வெளியிட்டுள்ளார்.

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுடனும் பைடன் பேசியுள்ளார். அதில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன நட்புறவை வலுப்படுத்துவது குறித்து அவர் உறுதி அளித்ததாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் ரொக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அப்பாஸிடம் பைடன் வலியுறுத்தியுள்ளார்.

 

Mon, 05/17/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை