உயிருக்கு போராடும் யானைக்கு தீவிர சிகிச்சை

வவுனியா, புளியங்குளம் சதுப்புநில பகுதியில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யானை சதுப்பு நிலத்திலிருந்து மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு நேற்று  சிகிச்சையளிக்கப்பட்டது. 

வவுனியா, புளியங்குளம் புதூர் காட்டு பகுதியில் கடந்த 14 ஆம் திகதி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து உயிருக்கு போராடிய   12 வயது மதிக்கத்தக்க யானைக்கு இராணுவத்தினர், வனஜீவராசிகள் திணைக்களத்தினர், கிராம மக்களின் உதவியுடன் வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் கால்நடை வைத்தியர் இணைந்து சிகிச்சை அளித்தனர். 

யானையை விரைவாக குணப்படுத்த ஒன்பதாம் நாளான நேற்று முன்தினம் வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரதாபன், இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், மடுகந்தை பௌத்த துறவி மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையினை பார்வையிட்டதோடு, யானை விரைவில் குணப்படுத்த என்ன மாற்றுவழி செய்யலாமென உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

இதன் பிரகாரம் 11 நாட்களாக சதுப்பு நிலத்திலுள்ள யானை மேலதிக சிகிச்சைக்காக சதுப்பு நிலத்திலிருந்து ஞாயிறு (23) மாலை வெளியே எடுக்கப்பட்டு நிலத்தின் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஓமந்தை விஷேட நிருபர்

Tue, 05/25/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை