நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் வழிகாட்டல் கலந்துரையாடல்

பிரதமருடன் மத்திய வங்கி ஆளுநர், அதிகாரிகள் சந்திப்பு

நாட்டின் பொருளாதாரம் குறித்து தீர்மானித்தல் மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான கலந்துரையாடல் நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (21) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அது தொடர்பான பகுப்பாய்வு குறித்து தெளிவுபடுத்தினர்.

கொவிட்19 தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், மத்திய வங்கியின் பங்கை முறையாக நிறைவேற்றுமாறும் ஆலோசனை வழங்கினார். இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித்த ராஜபக்ஷ, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டீ. லக்ஷ்மன், மத்திய வங்கியின் துணை ஆளுநர்களான டீ.எம்.ஜே.வை.டீ. பெர்னாண்டோ, கே.எம்.எம்.சிறிவர்தன, எம்.டபிள்யூ.ஜீ.ஆர்.டீ.நாணாயக்கார, பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sat, 05/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை