அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் ஒரு வார முடக்கநிலை

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து 7 நாள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி நேற்று நள்ளிரவு அது ஆரம்பித்து அடுத்த மாதம் மூன்றாம் திகதிவரை நீடிக்கும்.

அங்கு மொத்தம் 26 வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும் தொற்றுச் சம்பவங்கள் மாநிலம் எங்கும் பரந்த அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முடக்கநிலை நடப்புக்கு வந்ததும், அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர, மக்கள் வீட்டில் இருக்க வேண்டும். ஒரு நாளுக்கு, ஒரு வீட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே கடைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படும். 5 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்துக்குள் மட்டுமே மக்கள் பயணம் செய்ய முடியும்.

Fri, 05/28/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை