லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டு வீச்சு

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி கடந்த வியாழக்கிழமை நான்கு ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. மூன்று ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலை நோக்கி வந்ததாகவும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இதில் இரண்டு ரொக்கெட்டுகள் லெபனானுக்கு தவறி விழுந்ததாகவும் அடுத்த இரண்டு ரொக்கெட்டுகள் வடக்கு இஸ்ரேல் நகரை இலக்கு வைத்து வீசப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி லெபனானின் தி டெய்லி ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்தத் தாக்குதல் தெற்கு லெபனானில் இருக்கும் பலஸ்தீன அகதி முகாமில் இருந்து நடத்தப்பட்டதா அல்லது ஹிஸ்புல்லாஹ் அமைப்பினால் நடத்தப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான மோதல் உக்கிரம் அடைந்திருக்கும் நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 05/15/2021 - 12:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை