கடலட்டை பண்ணைகளை அதிகரித்து வடக்கு கடற்றொழிலாளர்களது வாழ்வில் பொருளாதார மாற்றம்

- கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை

கடலட்டை பண்ணைகளை அதிகரிப்பதனூடாக வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அதேநேரம் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வியலிலும் சிறந்த பொருளாதார ரீதியான மாற்றங்களை கொண்டுவர முடியுமென்ற நம்பிக்கை தன்னிடம் உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரியாலை பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குய் லான் கடலட்டை குஞ்சு இனப்பெருக்கப் பண்ணையை பார்வையிட்டதுடன் அப் பிரதேசத்தில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கு ஆர்வம் செலுத்துகின்ற கடற்றொழிலாளர்கள் சிலருடன் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அத்தடன், அரியாலை பிரதேசத்தில் கடலட்டை பண்ணை உருவாக்குவதற்கு பொருத்தமான இடங்களைப் பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

"நான் எமது மக்களின் எதிர்காலம் சிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதிலேயே அக்கறையாக உள்ளேன். அதற்காக எனக்கு கிடைக்கின்ற வளங்களையும் சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்துவதில் முழு அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றேன். 

அதன் தொடர்ச்சியாகத்தான் வடக்கில் நலிந்துகிடக்கும் எமது கடற்றொழிலாளர்களின்  நலன்கருதி  பெரும் பொருளாதாரத்தை ஈட்டக் கூடிய கடலட்டை வளர்ப்பு பண்ணைகளை பொருத்தமான இடங்களில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றேன். அதுமாத்திரமன்றி கடலட்டை தொடர்பான புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் எமது துறைசார் அதிகாரிகளை ஈடுபடுத்துவது மாத்திரமன்றி, நானும் நேரடியாகச் சென்று பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
 

Sat, 05/29/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை