சினோபார்ம் சீனத் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க தீர்மானம்

- சீனத்தூதுவருடன் அமைச்சர் சன்ன ஜயசுமன பேச்சு

சீனாவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சினோபார்ம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது தொடர்பில் சீன தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மருந்து உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க சீனாவிலிருந்து மூலப்பொருட்களை இலங்கைக்கு கொள்வனவு செய்து சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது தொடர்பில் சீனத் தூதரகமும் ஆர்வமுடன் செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, காலாவதியான கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகளில் எந்தவித உண்மையும் கிடையாதென்றும் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் மேலும் இரண்டு வருடங்களுக்கு உபயோகிக்கக் கூடியவை. அவற்றுக்கான காலாவதி காலத்துக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 05/11/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை