யானைகள் அட்டகாசம்

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் ஆனைவிழுந்தான் ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரப் பயிர்கள் அழிகப்படுவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கந்தபுரம், ஆனை விழுந்தான் ஆகிய கிராமங்களில் தினமும் காட்டு யானைகள் புகுந்து பெரும் அழிவை ஏற்படுத்தி வருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வேளை காட்டு யானைகளால் பெரும் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அண்மையில் கூட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் ஒரே நாளில் அழிக்கப்பட்டதாகவும் தங்களுடைய பிரதேசங்களை நோக்கி இப்போது காட்டு யானைகளின் வருகையும் அதிகரித்து காணப்படுவதால் தங்களுடைய பிரதேசங்களை சூழ யானை வேலிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரந்தன் குறூப் நிருபர்

Tue, 05/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை